-->

Wednesday, September 28, 2016

தொலைதொடர்பு செயற்கைக்கோளான ‘ஜிசாட்-18’ அக்டோபர் 4-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தகவல்

தொலைதொடர்பு செயற்கைக்கோளான 'ஜிசாட்-18' அக்டோபர் 4-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தகவல்
ஸ்ரீ ஹரிகோட்டா இந்தியாவின் தொலைதொடர்பு செயற்கைக் கோளான 'ஜிசாட்-18' அக்டோபர் 4-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும். தொலையுணர்வு செயற்கைக் கோள் 'ரிசோர்ஸ்சாட்-2', 'ஜிஎஸ்எல்வி மாக்-3' ராக்கெட் ஆகியவையும் அடுத்தடுத்த மாதங்களில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார். பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் மூலம் இந்தியா மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த 8 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஸ்ரீஹரிகோட் டாவில் செய்தியாளர்களிடம் பிஎஸ்எல்வி திட்ட இயக்குநர் பி.ஜெயகுமார் கூறியதாவது: தற்போது வணிகரீதியாக ஒரே முயற்சியில் வெவ்வேறு செயற் கைக் கோள்களை வெவ்வேறு சுற்றுவட்டப்பாதைகளில் நிலை நிறுத்த வேண்டி உள்ளது. இந்திய ராக்கெட் மூலமாக ஒரே பயணத் தில் இரு வேறு சுற்றுவட்டப் பாதை களில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல் முறை. பொதுவாக பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பயணம் 22 முதல் 25 நிமிடத்தில் முடிந்துவிடும். இருவேறு சுற்றுவட்டப் பாதைகளில் பயணிக்க வேண்டியிருந்ததால் பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட்டின் மொத்த பயண நேரம் 2.15 மணி நேரமாக இருந்தது. இப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளதால், இனிவரும் நாட்களில் வணிகரீதி யாக தேவைக்கேற்ப வெவ்வேறு செயற்கைக் கோள்களை வெவ் வேறு சுற்றுப்பாதைகளில் ஒரே பயணத்தில் நம்மால் செலுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய மைல்கல்
இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறியதாவது:
பிஎஸ்எல்வி - சி35 வெற்றி இஸ்ரோ வரலாற்றில் புதிய மைல் கல்லாகும். சிக்கலான தொழில் நுட்பத்தை இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இதற்காக அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாட்டு செயற்கைக் கோள் களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ வருவாய் ஈட்டி வருகிறது. இதுவரை 21 நாடுகளை சேர்ந்த 79 செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. அல்ஜீரியாவை சேர்ந்த மேலும் சில செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சார்க் நாடுகளுக்கான செயற் கைக் கோள்கள் தயாரிக்கும் பணியைப் பொறுத்தவரை, தங் களுக்கு இத்திட்டத்தில் விருப்பம் இல்லை என பாகிஸ்தான் ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. மற்ற நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசத்துடன் இதுபற்றி பேச்சு நடத்தி வருகிறோம். பிரெஞ்ச் கயானாவில் இருந்து நமது தொலைதொடர்பு செயற்கைக் கோளான 'ஜிசாட்-18' அக்டோபர் 4-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தொலையுணர்வு செயற் கைக் கோளான 'ரிசோர்ஸ்சாட்-2' நவம்பர் மாதம் ஏவப்பட உள்ளது. 'ஜிஎஸ்எல்வி மாக்-3' ராக்கெட் இந்த ஆண்டு இறுதியில் ஏவப் படும். இதற்கான பாகங்களை பொருத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
மங்கள்யான் பாதை மாற்றம்
செவ்வாய் கிரகத்தை ஆராய 'மங்கள்யான்' செயற்கைக்கோள் செலுத்தப்பட்டு கடந்த செப்டம்பர் 24-ம் தேதியோடு 2 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த செயற்கைக் கோள் மூலம் தொடர்ந்து தகவல்களைப் பெற்று வருகிறோம். கிரகணத்தின்போது சூரிய ஒளி மறைவுப் பகுதியில் நீண்ட நேரம் இந்த செயற்கைக் கோள் வரும்போது, அதன் பேட்டரிகளில் திறன் இழப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க செயற்கைக் கோளின் சுற்றுப்பாதையை அடுத்த ஆண்டு மாற்றம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.