இந்தியாவின் சிறந்த மணிக் கூண்டுகள்

இந்தியாவின் சிறந்த மணிக் கூண்டுகள்
நேரத்தைக் காட்டுவதுதான் மணிக் கூண்டின் பணி. ஆனால் இன்று நாம் யாரும் மணிக் கூண்டில் மணி பார்ப்பது கிடையாது. மணிக் கூண்டுகள் இன்று அலங்காரச் சின்னங்களாகவும் கட்டிடக் கலைக்கான நினைவுச் சின்னமாகவும் கம்பீரமாக இருக்கின்றன. ஆனால் தொடக்க காலத்தில் மணிக் கூண்டுகள் நேரம் காட்ட வெகுவாகப் பயன்பட்டன. தொழிற்சாலைகள், நிர்வாக அலுவலகங்களில் நேரநெறி முறை அவசியமானதாக இருந்தது. அதனால் சம்பந்தப்பட்ட அரசுகளே பொது இடங்களில் மணிக் கூண்டுகளைக் கட்டின. மேலும் அந்தக் காலத்தில் எல்லோரிடம் கைக் கடிகாரம் இருக்காது. வீட்டிலும் கடிகாரம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் பொது இடங்களில் மணிக் கூண்டுகள் உருவாக்கப்பட்டன. 13-ம் நூற்றாண்டு வாக்கில்தான் முதல் மணிக் கூண்டு உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இப்போது உள்ளதுபோல் முட்கள், முகம் அற்றதாக இருந்தது. அப்படியானால் எப்படி நேரத்தை அறிய முடியும் என்று கேள்வி எழும். அந்தக் கடிகாரம் ஒலி எழுப்பும். அதாவது வேலைக்குச் செல்லும் நேரத்தில் ஒலி எழுப்பும். பிரார்த்தனை சமயத்தில் ஒலி எழுப்பும். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியில் மணிக் கூண்டுகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டன. அவர்களுடைய நிர்வாகத்துக்காக இந்த மணிக் கூண்டுகளை அவர்கள் கட்டினார்கள். மக்கள் கூடும் முக்கிய சாலைகளில் மணிக் கூண்டுகள் உருவாக்கப்பட்டன. சென்னையில் மிண்ட் எனப்படும் தங்கசாலை அந்தக் காலத்தில் நகரின் முக்கியமான பகுதியாக இருந்தது. அதனால் அங்கு மணிக் கூண்டு நிறுவப்பட்டது. இந்தியா முழுவதும் இம்மாதிரி பல மணிக் கூண்டுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவற்றை இங்கு வரிசைப்படுத்துகிறோம்.
ஜோத்பூர் மணிக் கூண்டு, ஜோத்பூர்
மைசூரு மணிக் கூண்டு
தங்கசாலை மணிக் கூண்டு, சென்னை
ஹுசைனாபாத் மணிக் கூண்டு,
ராஜாபாய் மணிக் கூண்டு, மும்பை
செகந்திராபாத் மணிக் கூண்டு, செகந்திராபாத் Comments