உலகைச் சுற்றி

உலகைச் சுற்றி
* உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள 'போகிமேன்-கோ' செல்போன் விளையாட்டு, ஜப்பானில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
* நடப்பு 2016-ம் ஆண்டு, இதுவரையில்லாத அளவுக்கு வெப்பமிகு ஆண்டாக இருக்கும் என ஐ.நா. அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்கள், முந்தைய வெப்ப அளவை விஞ்சி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
* ஐ.நா. சபையின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கான ரகசிய தேர்தல் நடந்தது. இதில் முதலிடம் பிடித்திருப்பவர், போர்ச்சுக்கல் முன்னாள் பிரதமர் ஆன்டனியோ குடிரெஸ் ஆவார். அவருக்கு அடுத்த இடத்தில் சுலோவேனியாவின் முன்னாள் அதிபர் டேனிலோ டுர்க் உள்ளார். இருப்பினும் யார் புதிய பொதுச்செயலாளர் என்பதை பாதுகாப்பு கவுன்சில்தான் முடிவு செய்து அறிவிக்கும்.
* ஐ.எஸ். இயக்கத்தினரை வீழ்த்துவதற்கு புதிய வழிமுறைகளை காண வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி அழைப்பு விடுத்துள்ளார்.
* பப்புவா நியூகினியா நாட்டு பாராளுமன்றத்தில் பிரதமர் பீட்டர் நீல் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
* சீனாவில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட கிராம தலைவர் லின் ஜூலுவான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.Comments