கூடுதல் சிறப்பு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்கள்

கூடுதல் சிறப்பு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்கள்
ஸ்மார்ட் போனில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தொழில்நுட்ப சிறப்பு வசதிகள் என்பது புதுமையும், நவீனமும் கொண்டவாறு அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் தங்கள் நிறுவன ஸ்மார்ட் போன் வசதியை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளில் அதிகம் செலவிடுகின்றன.புதிய வகை ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தும் அனைத்து நிறுவனமும் அதில் ஏதேனும் ஓர் புதிய சிறப்பு வசதியை கூடுதலாக வழங்குவதில் கவனத்துடன் செயல்படுகின்றன. அவை முந்தைய ஸ்மார்ட் போன்களைவிட அதிகளவு சிறப்பு தன்மையும், செயல்பாட்டு சுலபமும் கொண்டவாறு இருப்பதுடன் முந்தையதை விட இது மேம்பட்டது என்றவாறு ஈர்ப்பு தன்மையுடன் வெளியிடப்படுகிறது. அதுபோல் ஸ்மார்ட் போனில் உள்ள கூடுதல் சிறப்பு வசதிகள் சிலவற்றினை பார்ப்போம்.
குறைவான வெளிச்சத்திலும் பிரகாசமான புகைப்படங்கள்:
ஸ்மார்ட் போன் என்பதில் கூடுதல் சிறப்பு வசதி கொண்ட ஸ்மார்ட் கேமரா வசதிகளையும் பெற முடிகிறது. குறைவான வெளிச்சத்தில் நாம் புகைப்படம் எடுத்தாலும் அது மிக தெள்ளத் தெளிவான, பிரகாசமான புகைப்படமாக அளவிற்கு அதன் கேமரா தொழில்நுட்ப வசதி மேம்படுத்தப்பட்டு உள்ளது. 13 மெகா பிக்சல் பின்புற கேமரா என்பது லேசர் சென்சார் மற்றும் உயர்தர துல்லியத்துடன் தெரியும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இரட்டை பின்புற வசதி மூலம் முதலாவது கிளிக் செய்தவுடன் காட்சியை படம் பிடிக்கும். அடுத்தது போகஸ் செய்யும். ஜியோ டேக்கிங், டச் போகஸ், பேஸ் டிடெக்‌ஷன் ஒரு நொடியில் 30 பிரேம் வசதி போன்ற வசதிகளும் உள்ளன.
ஆச்சரியமூட்டும் காட்சி திரை வசதி:
வளைந்த கண்ணாடி, மெல்லிய வடிவமைப்பு, எளிதில் உடைப்படாத திரை என்பதுடன், முழு HD டிஸ்பிளே காட்சி திரை, அதாவது 178 ஆங்கிளில் காணும் வசதி கொண்டவாறு உள்ளன. ஸ்மார்ட் போனில் ஒட்டுமொத்த மேல் திரையில் முக்கால் பாகம் காட்சி தெரியும் அமைப்பிலான வீடியோ பார்க்கும் வசதியும் உள்ளது. இதன் மூலம் சிறிய அளவு காட்சி திரை போன்று காணும் பிரமிப்பை பெறலாம். ஒரு இன்ச்-யில் 440 Ppi கொண்ட திரை என்பதால் மிக துல்லியமான காட்சியை காணும் வசதி உள்ளது.
மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள்:
ஸ்மார்ட் போனில் உள்ள தகவல்கள், வீடியோ மற்றும் டேட்டாக்களை பாதுகாக்க சிறப்பு வசதிகள் உள்ளன. நமது ஸ்மார்ட் போனை நம்மைத் தவிர வேறு எவரும் பயன்படுத்த முடியாத வகையில் விரல் ரேகை பாதுகாப்பு வசதிகள் உள்ளது. இதில் தற்போது கூடுதலாக நமது ஆப்ஸ் அனைத்தையும் விரல் ரேகை பாதுகாப்பில் வைக்க முடியும்.
கண் ரெட்டினா ஸ்கேன் செய்தால் தான் நமது போனை ஓப்பன் செய்யும் வசதி உள்ளது. இது அதிநவீன பாதுகாப்பு வசதியாக திகழ்கிறது.
ஷேக் செய்வதன் மூலம் நிகழ்வுகளை மாற்றும் வசதி:
நாம் ஸ்மார்ட் போனின் தொடுதிரையை தொட்டு பாடல்களை மாற்றுவது, ஆப்ஸ்களை மாற்றுவது போன்ற பணிகளை செய்கிறோம். ஆனால் தற்போது புதிய ஸ்மார்ட் போனில் தொடு திரையை தொடாமல் போனை ஷேக் செய்வதன் மூலம் பாடல்களை மாற்றி விடலாம். ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட ஆப்ஸ்களை நமது தேவைக்கு ஏற்ப ஷேக் செய்வதன் மூலமே மாற்றி விடலாம். இது சுலபமான இயக்க வசதியாக கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போனின் ஸ்மார்ட் வசதிகள் அவ்வப்போது அதிகரித்துக் கொண்டே போகின்றன.Comments