கோலியின் சாதனைகள்

கோலியின் சாதனைகள்


கேப்டனாக விராட் கோலி ஆயிரம் ரன்களை (18 இன்னிங்ஸ்) கடந்திருக்கிறார். இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய இந்திய கேப்டன்களின் வரிசையில் 2-வது இடத்தை டோனியுடன் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த சாதனை பட்டியலில் சுனில் கவாஸ்கர் (14 இன்னிங்ஸ்) முதலிடம் வகிக்கிறார்.
* கேப்டனாக வெளிநாட்டு மண்ணில் கோலி அடித்த 5-வது சதம் (12 இன்னிங்ஸ்) இதுவாகும். இதன் மூலம் அன்னிய மண்ணில் கேப்டனாக அதிக சதங்கள் எடுத்த இந்தியரான முகமது அசாருதீனின் சாதனையை (41 இன்னிங்சில் 5 சதம்) சமன் செய்தார்.
* 6 ரன் எடுத்த போது விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை(42-வது டெஸ்ட்) கடந்தார்.
* வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இரட்டை செஞ்சுரி அடித்த 3-வது வெளிநாட்டு கேப்டன் கோலி ஆவார். இங்கிலாந்தின் லியோனர்ட் ஹூட்டன் (205 ரன், 1954-ம் ஆண்டு), ஆஸ்திரேலியாவின் பாப் சிம்சன் (201 ரன், 1965-ம் ஆண்டு) ஏற்கனவே இச்சிறப்பை பெற்று இருக்கிறார்கள்.
* கோலி ரன் எடுத்த விதமும், அவரது ஷாட்டுகளும், சச்சின் தெண்டுல்கர் தனது தொடக்க காலத்தில் ஆடியதை நினைவுப்படுத்துவது போன்று இருந்ததாக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டினார்.Comments