கட்டிடக் கலை பட்டப்படிப்பில் சேர இலவச பயிற்சி

கட்டிடக் கலை பட்டப்படிப்பில் சேர இலவச பயிற்சி
கட்டிடக் கலை பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி முகாம் பெரியார் திடலில் நாளை நடக்கிறது.இதுதொடர்பாக பெரியார் பயிற்சி மையம் நேற்று வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:கட்டிடக் கலை படிப்பில்
சேருவதற்கு, தேசிய கட்டிடக் கலை திறனாய்வுத் தேர்வில் (என்.ஏ.டி.ஏ) தேர்ச்சி பெற வேண்டும். எனவே, பிளஸ் 2 படித்த மாணவர் கள் மேற்கொண்டு கட்டிடக் கலை தொடர்பான பட்டப்படிப்பில் சேர இலவச பயிற்சி முகாம் ஏப்ரல் 18-ம் தேதி மாலை 5.30 மணியளவில் சென்னை, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற உள்ளது.இந்த முகாமில், பொறியாளர் வ.சுந்தரராஜூலு, கட்டிடக் கலை நிபுணர் திரிபுரசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்று வழிகாட்ட உள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு 044-26618056, 9940638537, 9487157344 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Comments