உலக செய்திகள் 1

பிரான்ஸைச் சேர்ந்த மைக்கேல் ஃப்ளாமண்ட், தன்னுடைய பேக்கரியை ஒரு யூரோவுக்கு விற்பனை செய்திருக்கிறார்! ஜெரோம் ஆகன்ட் வறுமையில் வாடுபவர். மைக்கேலின் உயிரைக் காப்பாற்றியதால், அவருக்கு இந்த பேக்கரி வழங்கப்பட்டிருக்கிறது. மைக்கேல் இப்படி ஒரு
பேக்கரியையே கொடுக்கும் அளவுக்குப் பரந்த மனம் படைத்தவரல்ல. ஆனால் தினமும் தன் பேக்கரிக்கு வரும் ஜெரோமுக்கு ஒரு கப் காபியை இரக்கப்பட்டுக் கொடுப்பார். டிசம்பர் மாதம் வழக்கம் போல ஜெரோம் காபிக்காக பேக்கரிக்கு வந்தார். ஏதோ வாடை உள்ளிருந்து வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கார்பன் மோனாக்சைடு வெளியேறி, மைக்கேல் மயங்கி விழுந்திருந்தார். இன்னொரு பக்கம் நெருப்பு வேகமாகப் பரவ ஆரம்பித்திருந்தது. ஜெரோம் உடனே செயலில் இறங்கினார். மைக்கேலை வெளியில் அழைத்து வந்தார். அவசர உதவிக்கு போன் செய்தார். பற்றி எரியும் நெருப்பை அணைத்தார். ''ஜெரோம் மட்டும் அன்று இல்லாவிட்டால், நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். கார்பன் மோனாக்சைடு வெளியேறியது என் நாசிக்குத் தெரியவே இல்லை. மருத்துவமனையில் 12 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. ஆனாலும் உயிருடன் இருப்பது ஆறுதலாக இருக்கிறது. மீண்டும் பேக்கரியைத் திறந்தேன். ஜெரோமை வேலைக்குச் சேர்த்தேன். பிரமாதமாக வேலை செய்தார். நான் சொல்வதை அப்படியே கேட்டுக்கொள்வார். அதனால்தான் ஒரு யூரோவைப் பெற்றுக்கொண்டு இந்த பேக்கரியை ஜெரோமுக்குக் கொடுத்துவிட்டேன். ஒரு திறமையாளரிடம் என் பேக்கரியைக் கொடுத்திருக்கிறேன் என்ற சந்தோஷம் மீதி வாழ்நாளுக்கும் போதும். தினமும் சில மணி நேரம் இங்கே நான் பணிபுரிய ஜெரோமிடம் அனுமதி வாங்கியிருக்கிறேன்'' என்கிறார் மைக்கேல்.
ஒரு யூரோவுக்கு ஒரு பேக்கரி கொடுத்த வள்ளல் மைக்கேல்!
பிரிட்டனைச் சேர்ந்த கிரஹாம் ஷார்ட் மிகச் சிறிய நுணுக்கமான வடிவங்களைச் செதுக்குவதில் நிபுணர். இவரது மைக்ரோ சிற்பங் களை வெறும் கண்களால் காண முடியாது. லென்ஸ் மூலம் மட்டுமே பார்த்து, ரசிக்க முடியும். ஊசி முனை அளவு தங்கத்தில் கூட அற்புதமாகத் தன் திறமையைக் காட்டி விடுகிறார்! இரவு நேரங்களில்தான் வாகனங்களின் சத்தம் குறைவாக இருக்கும் என்பதால், கண் விழித்து வேலை செய்கிறார். ஸ்டெதஸ்கோப்பைக் காதில் வைத்து, தன்னுடைய இதயத் துடிப்பை உற்றுக் கவனிக்கிறார். 20 நிமிடங்களுக்குப் பிறகு இதயம் மெதுவாகத் துடிக்க ஆரம்பிக்கும்போது தன் வேலையை ஆரம்பிக்கிறார். அதிகாலை 6 மணி வரை வேலை செய்கிறார். ஒரு சிற்பத்தை முடிக்க இப்படித் தொடர்ந்து 4 இரவுகள் வரை வேலை செய்வார். ''என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்த உலகில் என் னைப் போல இன்னொருவர் இருக்க முடியாது'' என்கிறார் கிரஹாம். இந்த வயதில் இவ்வளவு நுணுக்கமாகச் சிற்பத்தை உருவாக்க முடி யுமா என்று பலரும் ஆராய்ந்தபோதுதான், கிரஹாம் மாத்திரைகளை உட்கொள்வது தெரிய வந்தது. இப்படி மருந்துகளை எடுத்துக்கொள் ளும்போது இதயம் 1 நிமிடத்துக்கு 20 தடவை மட்டுமே துடிக்கிறது. ஆனாலும் கிரஹாம் ஒரு சாதனையாளர் என்பதில் சந்தேகமே இல்லை!
உலகின் ஒரே மைக்ரோ சிற்பி!


Comments