உடல் சூட்டை குறைக்கும் குளுகுளு தர்பூசணி
தர்பூசணி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. வெயில் காலங்களில் உடலின் வெப்பநிலையையும், இரத்த அழுத்தத்தையும் சரிசெய்கிறது. ஆரோக்கியமான ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய பழங்களில் ஒன்றான தர்பூசணியில், விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்து காணப்படுகிறது. 100 கிராம் தர்பூசணியில், 90% தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போஹைட்ரேட் 7% உள்ளது.இதில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால் கண் மற்றும் மூளை சம்பந்தமாக நோய்களை தடுக்கிறது.