Skip to main content

உலக முதியோர் தினம்

ஒவ்வொரு சாதனையாளரின் வெற்றிக்குப் பின்னால், அவர்களின் குழந்தைப் பருவ சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு அவர்களது தாத்தா, பாட்டிகள் இருப்பதாக முதியோர் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்களை மரியாதையுடன் நடத்தவும், குடும்பம், சமூகத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவுகூரவும், அவர்களின் அறிவு, சிந்தனை ஆற்றல் மற்றும் சாதனைகளை இளைய சமுதாயத்தினர் பார்த்து கற்றுக்கொள்ளவும், ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி சர்வதேச முதியோர் தினவிழா கொண்டாடப்படுகிறது.

முதியோர் எதிர்நோக்கும் குடும்பம், சமூகப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும், அவர் களுக்கென சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.வயதானவர்களின் சமூகப் பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சி.சிதம்பரம் கூறியது:

பொதுவாக 60 வயதைக் கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கணிப்புப்படி இன்று உலகில் பத்துக்கு ஒருவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள். 2050-ம் ஆண்டுக்குள் ஐந்துக்கு ஒருவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டுவார்கள் என்றும், 2150-ம் ஆண்டுக்குள் இது மூன்றுக்கு ஒருவர் என்ற நிலையை எட்டிவிடும் எனவும் கூறப்படுகிறது. தற்போது உலகில் சுமார் 60 கோடி முதியவர்கள் இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2050-ம் ஆண்டு 200 கோடியாக அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இந்த தினம் தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கவுரவம் செலுத்தும் தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

சத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் இவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஒரு தனிமனிதனின் சராசரி ஆயுள்காலம் 81 ஆண்டுகளாக கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு நாடு இந்த கணிப்பு வேறுபடுகிறது. உலக மனித ஆயுள் காலப் பதிவின்படி, இதுவரை 123 வயதுக்குமேல் யாரும் வாழ்ந்ததாக சான்றுகள் இல்லை. 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்.

உலகமயமாக்கல் சூழலில், மேலை நாடுகளின் கலாச்சாரத் தாக்கத்தால் இயந்திர வாழ்க்கையில் சிக்குண்ட மனிதன் தன் பெற்றோருடனும், முதியோருடனும் பேசும் நேரத்தைக்கூட குறைத்துக் கொண்டே வருகிறான். பொருளாதார ரீதியிலான தன்னிறைவுக்கு, தன்னை ஆற்றுப்படுத்துவதிலேயே ஆயுளை தேய்க்கிறான். கடந்த காலங்களில், உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர்கள் சரித்திரப் புகழ் சாதனையாளர்கள் அனைவரும் முதியோரின் வழிகாட்டுதலில், பராமரிப்பில் வளர்ந்தவர்களாகவே இருப் பார்கள்.

சிந்திக்க வைக்கும் பாட்டிக் கதை. குறிப்பாக, பாட்டிக் கதை சொல்வதற்கு, முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் தாத்தா, பாட்டி இருப்பார்கள். அவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவத்தை கதைகளாக தன் பேரன், பேத்திகளுக்கு சொல்வர்.

சிறுவயது முதலே இதுபோன்று கதைகளைக் கேட்டு வளரும் குழந்தைக்கு சிந்திக்கும் திறனும், ஆக்கத்திறனும் கூடும். வரலாற்றில் பார்த்தால் ஒவ்வொரு சாதனையாளரின் குழந்தைப் பருவத்தில் தாத்தா, பாட்டிகளுக்கு பெரும் பங்கு உண்டு. அதேபோல, குடும்ப அளவில் வழிநடத்தும் நல்வழிமுறைகளை தங்கள் அனுபவ ரீதியில் தன் குடும்பத்தாருக்கு போதித்து அந்தத் தலைமுறையை செழிக்க செய்வார்கள் ’’ என்றார்.

இதுகுறித்து சி.சிதம்பரம் மேலும் கூறியது:

இந்திய வாழ்க்கைச் சூழலில் வயதான ஆண்களைவிட, பெண்களே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இன்றைய இந்திய வாழ்வியல் சூழல் அடிப்படையில் ஆண்களின் சராசரி திருமண வயது 30-க்கும் மேலாக உள்ளது. ஒரு ஆண் திருமணம் செய்வதற்கு அடிப்படைத் தேவையாக அவனது வேலைவாய்ப்பு அமைகிறது. பிறகு திருமணம் செய்து குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே, அவனது ஆயுட்காலம் முடிந்துவிடுகிறது. பிறகு கணவரை இழந்த பெண், சமூகத்தில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

அரசும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வந்தாலும், வயதான பெண்களின் சமூகப் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலை நாடுகளை ஒப்பிடும்போது வயதானோருக்கு ஒதுக்கப்படும் நிதி, பாதுகாப்பு சார்ந்த முக்கியத்துவத்தைக் காட்டிலும், இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலேயே காட்டப்படுகிறது. முதியோர்களுக்கென ஒதுக்கப்படும் நிதி, உதவிகள் அவர்களை முறையாக சென்றடைகின்றனவா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றார்.



Comments

Popular posts from this blog

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாத ஆணும், பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து கடந்த ஜூன் 25-ம் தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதி யில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந் தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர். இதையடுத்து, ‘சீலை’ அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத் தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எ

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI | SURYA TRB COACHING CENTRE MADURAI (a place.. You try to achieve) (Exclusively for ZOOLOGY) CELL : 8124602428, 9443564713, 8124825759, 8248826936 |  DOWNLOAD