இந்திய விடுதலைக்காகப் போரிட்டவர் அன்னிபெசன்ட் அம்மையார். அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
> அன்னிபெசன்ட் லண்ட னில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரது தாயின் தோழி எலன் மரியாட் தான் அவரை
வளர்த்தார். 20-வது வயதில் பிராங்க் பெசன்ட் என்ற பாதிரியாரை மணந்தார்.
> மத நம்பிக்கைகள் அவரை விட்டு விலகின.கணவரையும் பிரிந்தார். பாபியன் சிந்தனைகள் மூலம் புரட்சியை படிப் படியாக சாதிக்கும் இயக்கத்தில் ஆர்வம் மிகுந்தது. பின்னர் மகளிர் வாக்குரிமை, தொழிலாளர் மேம்பாட்டுக்காகப் பணியாற்றினார்.
> ப்ரைன்ட் மற்றும் மே பகுதி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்த பெண்களுக்கு அதிக ஊதியம், ஒழுங்கான இருப்பிட வசதி ஆகியவற்றை போராடிப் பெற்றுத் தந்தார். இந்தியத் தத்துவங்கள் மீது ஈர்ப்பு உண்டாகி, தியாசபி இயக்கத்தில் சேர்ந்தார்.
> இந்தியா வந்தவர் 40 ஆண்டுகள் இங்கேயே தங்கி சமூகச் சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் ஆகியவற்றில் பங்குபெற்றார். வாரணாசியில் மத்திய இந்துப் பள்ளி, கல்லூரி தொடங்கினார்.
> இந்தியாவுக்கு சுயாட்சி கோரும் ‘ஹோம் ரூல்’ இயக்கத்தை மகாராஷ்டிரம், கர்நாடகம், பிஹார் உள்ளிட்ட பகுதிகளில் திலகர் தலைமையிலான குழு முன்னெடுக்க, மற்ற பகுதிகளில் அன்னிபெசன்ட் தலைமையிலான போராட்டக்குழு தீவிரப்படுத்தியது.
> அன்னிபெசன்ட் சார்பில் அருண்டேல், சி.பி.ராமசுவாமி அய்யர், பி.பி.வாடியா முதலிய தளபதிகள் ஹோம் ரூல் இயக்கத்தை சென்னை அடையாறு பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு நடத்தினர்.
> அன்னிபெசன்ட் 1917-ல் கைது செய்யப்பட்ட பிறகு போராட்டம் தீவிரமடைந்தது. இந்தியாவுக்கான ஆங்கில அரசின் செயலாளர் மாண்டேகு இப்படி எழுதினார், ‘‘சிவன் தன் மனைவியை 52 துண்டுகளாக வீசினார். அந்த துண்டுகள் அனைத்தும் மீண்டும் உருப்பெற்று ஒன்றுசேர்ந்து எழுந்ததுபோல அன்னிபெசன்ட் உருவெடுத்து நிற்கிறார்!’’
> காங்கிரஸ் - முஸ்லீம் லீக் ஒற்றுமையை சாதிப்பதிலும் முக்கியப் பங்காற்றினார் அன்னிபெசன்ட். ஆந்திராவில் 1918-ல் மதனப்பள்ளி கல்லூரியைத் தொடங்கினார். மகளிர் கல்லூரியையும் தொடங்கிய அவர் கல்வியை வளர்ப்பதிலும் பங்காற்றினார்.
> காங்கிரஸ் இயக்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்பும் அவருக்கே உரியது. சிறையில் இருந்து மீண்டதும் புகழின் உச்சத்தில் அவர் இருந்தபோது, திலகரின் பரிந்துரைப்படி அப்பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
> காந்தியின் போராட்ட முறைகளோடு முரண்பட்டார். ஆங்கில அரசை சட்டரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பது அவரது கருத்து. ஆன்மிகத்திலும் மூழ்கினார். தத்துவ மேதை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை மீட்பர், புத்தரின் அவதாரம் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Comments