- சோதனைக் குழாய் குழந்தைகளை உலகுக்குத் தந்த அறிவியல் அறிஞர் ராபர்ட் எட்வர்ட்ஸின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
- இங்கிலாந்தின் பேட்லி நகரில் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பத்தில் விவசாய அறிவியலில் இருந்த ஆர்வத்தால் பட்டப்படிப்பு படிக்கச் சென்றவர், காலப்போக்கில் ஆர்வம் இழந்து விலங்கியல் பக்கம் திரும்பினார்.
Professor Sir Robert Edwards (left) with Louise Brown (right) and her mother Lesley Brown in 2008 - எலிகளின் உயிரியல் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்வது அவரது முனைவர் பட்ட ஆய்வாக அமைந்தது. அப்போது, ஹார்மோன் ஊசி போட்டு பெண் எலிகளிடம் இருந்து அதிக கரு முட்டைகளை உருவாக்கி சாதனை படைத்தார்.
- நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ரூதர்போர்டின் பேத்தி ரூத் ஃபவுலரை காதல் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்தன. மனைவிக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர் மோலி ரோஸிடம் அவர் ஒரு முக்கிய உதவி கேட்டார். கருமுட்டைகளைத் தரவேண்டும் என்பது அந்த கோரிக்கை.
- கருமுட்டைகளும் கிடைத்தன. அவை வளராது என்று முந்தைய ஆய்வுகள் கூறியபோதிலும், தொடர்ந்து முயற்சித்து, அவற்றை வளரவைத்தார். ஸ்டெப்டோ என்ற மருத்துவருடன் சேர்ந்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
- பல கருமுட்டைகளை பெண்களின் கருப்பையில் செலுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு செலுத்தியும் ஒரே ஒரு பெண் மட்டுமே கர்ப்பம் தரித்தார். அந்த கருவும் கர்ப்பப் பையில் உருவாகாமல் கருமுட்டை (ஃபாலோப்பியன்) குழாயில் உருவாகியிருந்தது.
- பழமைவாதிகள், அரசுத் தரப்பிடம் இருந்து எதிர்ப்புகள் வந்ததால், மான்செஸ்டர் நகருக்கு வெளியே ஜன்னல்களே இல்லாத ஒரு சிறிய மருத்துவமனையின் ஆய்வகத்தில் தங்களுடைய ஆய்வுகளோடு போராடினர்.
- இறுதியாக, கண்ணாடிக் குடுவையில் வளர்க்கப்பட்ட கருமுட்டையை, 9 ஆண்டுகளாக பிள்ளைப்பேறு இல்லாத பிரவுன் என்ற பெண்ணிடம் செலுத்தினார். செயற்கையாக ஹார்மோன் மூலம் பெறும் கருமுட்டைக்கு பதிலாக, அந்த பெண்ணின் கருமுட்டையையே வளர்த்து செலுத்தினார். கருமுட்டை எடுக்கும் வேலைகளை ஸ்டெப்டோ செய்தார்.
- 1978 ஜூலை 25. உலகில் சோதனைக் குழாய் மூலம் முதல் குழந்தை லூயிஸ் ஜாய் பிரவுன் சுக ஜனனம்!
- உலகம் முழுக்க சோதனைக் குழாய் முறையில் இதுவரை ஏறக்குறைய அரை கோடி குழந்தைகள் பிறந்திருக்கின்றன. நோபல் பரிசை ராபர்ட் எட்வர்ட்ஸ் 2010-ல் பெற்றார். கடந்த ஆண்டு ஏப்ரலில் மறைந்தார்.
- ‘‘வாழ்க்கையில் மிக முக்கியமானது குழந்தை பெறுவதே. இந்த எண்ணம்தான் என்னை வெற்றி பெறச் செய்தது’’ என்றார் எட்வர்ட்ஸ்.
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai
Saturday, September 27, 2014
ராபர்ட் எட்வர்ட்ஸ்-இங்கிலாந்து அறிவியல் அறிஞர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment