-->

Saturday, October 22, 2016

அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்-தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள்

அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்-தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள்
தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி வெளி யிட்ட அறிக்கை: தமிழகத்தில் பணிபுரியும் 13 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகிற 29-ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அக்டோபர் மாத ஊதியத்தை 25-ம் தேதியே வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள அகவிலைப்படியை விரைவாக வழங்க ஆவண செய்யுமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு இன்று எழுத்துத்தேர்வு

பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு இன்று எழுத்துத்தேர்வு
அரசு பொறியியல் கல்லூரிக ளில் உதவிப் பேராசிரியர் பணி யிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், 192 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு 48 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர் களில் 2,336 பேரின் விண்ணப்பங் கள் நிராகரிக்கப்பட்டன. எஞ்சிய 45 ஆயிரத்து 950 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். எழுத் துத்தேர்வு சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் உள்பட 11 மாவட்டங்களில் 113 மையங்களில் நடைபெறுகிறது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் உமா நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:- அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு 22-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் காலை 9 மணிக்குள் வந்துவிட வேண்டும். 9.30 மணிக்கு மேல் எந்த தேர்வரும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காவல்துறை அதிகாரிகளின் முழு சோதனை முடிந்த பின்னரே தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். தங்களின் உடமை களை உடன் வருவோரிடம் ஒப்படைத்து விட வேண்டும். செல் போன், கம்ப்யூட்டர், லேப்டாப், கால்கு லேட்டர், எலெக்ட்ரானிக் கைக்கடி காரம் ஆகியவற்றை தேர்வு மையத் துக்குள் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. கைக் குட்டையை யும் கொண்டுசெல்லக் கூடாது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, 2 பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதி உண்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பிக்க...

நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பிக்க...

நாம் அன்றாடம் சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், நம்மை அச்சுறுத்தும் பலவித நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம்.
குறிப்பாக, நுரை யீரல் தொற்றுகளில் இருந்து விடுபடுவதற்கு வைட்டமின்கள், மினரல், புரதம், பைட்டோ சத்துகள், ஆன்டி ஆக்சிடென்டுகள் போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும்.
மழை, குளிர் காலங்களில் நுரையீரல்கள் அதிகம் தாக்கத்துக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அதற்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
உதாரணமாக, இஞ்சி, பூண்டு மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால், குளிர்காலத்தில் ஏற்படும் நுரையீரல் தொற்றுகளை தடுக்க முடியும்.
கேரட் மற்றும் கொத்துமல்லியை சம அளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிதளவு இஞ்சித் துண்டை சேர்த்து அரைத்து ஜூஸ் போல தயாரித்துப் பருகினால், உடலின் சக்தியை அதிகரித்து, அசதியைப் போக்கும்.
மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நுரையீரல் தொற்றுகளைத் தடுக்கலாம், பலவித ஆரோக்கிய நன்மை களைப் பெறலாம்.
பட்டாணியில் புரதம், வைட்டமின் ஏ, சி, கே, இரும்புச்சத்து, கால்சியம், காப்பர், பொட்டாசியம் போன்ற நம் உடல் ஆரோக்கியத்துக்கான சத்துகள் நிறைந்துள்ளன. குளிர்காலத்தில் ஏற்படும் நுரையீரல் அலர்ஜியையும் பட்டாணியில் உள்ள சத்துகள் போக்குகின்றன.
பசலைக் கீரையில் 30 வகையான பிளேவனாய்டுகள் உள்ளன. எனவே இந்தக் கீரையை நம் உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் புற்றுநோய், ஜலதோஷம், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொழில்நுட்ப வசதியில் மேம்பட்ட நவீன தொலைகாட்சிகள்

தொழில்நுட்ப வசதியில் மேம்பட்ட நவீன தொலைகாட்சிகள்

தொலைகாட்சியில் புதிய புதிய மாற்றங்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன. எல்.சி.டி. தொலைகாட்சி வந்ததிலிருந்து டிவியின் தொழில்நுட்ப மாற்றம் அடிக்கடி கண்டறியப்பட்டு விற்பனைக்கு தொலைகாட்சிகளில் புகுத்தப்படுகிறது. இதன் காரணமாய் புதியதாய் டிவி வாங்க நினைப்பவர்கள் எந்த தொழில்நுட்பம் நமக்கு ஏற்றவாறு இருக்கும் என ஆராய வேண்டிய உள்ளது.இன்றைய நாளில் 4K UHD, வளைந்த காட்சிதிரை, க்ஹண்டம் டாட்ஸ் HDR என்றவாறு பல தொழில்நுட்ப வசதிகள் உள்ளவாறு தொலைகாட்சிகள் விற்பனைக்கு வருகின்றன. இவை அனைத்தும் பார்க்கும் பார்வை கோணத்தில் சிற்சில மாற்றங்களையும், வண்ண மாற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டு திகழ்கின்றன.4K UHD தொழில்நுட்ப தொலைகாட்சிகள்:-4K UHD என்பதில் தற்போது மிக பிரபலமானதாக 2160P அதித வளர்ச்சியாக உள்ளது. இதில் UHD என்பது அல்ட்ரா ஹை டெபனீஷன் என்பதாகும். இதற்கு முன்வந்த 1080P என்ற ரெட்டின எப்கட் தொலைகாட்சியே இந்த சூழலில் ஏற்ற தொலைகாட்சியாக உள்ளது.4K UHD என்றால் அதற்கேற்ற செட்பாக்ஸ் தான் அமைத்து பார்க்க வேண்டும். அதே தொழில்நுட்ப தொலைகாட்சி சானல்கள் ஒளிபரப்பும் போதுதான் அதன் முழு பலனையும் பெறமுடியும். எனவே 2060 P 4K UHD டிவிக்களை காட்டிலும் 1080 P தொலைகாட்சி தற்போதைய நிலையில் சிறப்பாக உள்ளது.4K தொழில்நுட்பம் மூலம் படங்கள் தெளிவு, துல்லியம், சிறந்த வண்ண வடிவமைப்பில் காட்சிகளை காணலாம். இதில் நாம் படங்களை பார்க்கும்போது நாம் இயற்கை எழில் காட்சிகளை தத்ரூபமாக மிக அருகில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும்.நேரடியாக நாம் எப்படி பார்க்கின்றோமோ அதே வண்ணக்கலருடன் வெளிப்படுத்துவதே க்வாண்டம் டாட்ஸ் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம். நானோ படிகங்களின் துணையுடன் உருவாகும் க்வாண்டம் டாட்ஸ் மூலம் ஒரு பில்லியன் பலதரப்பட்ட வண்ண சாயல்களை காண முடியும். அதுபோல் சாதாரண டிவிக்களை விட 64 மடங்கு கூடுதலான வண்ண வெளிப்பாடுகளை தர வல்லது க்வாண்டம் டாட்ஸ். வாட்டர் கலரில் எப்படி பிரகாசமான வண்ண பிரதிபலிப்பு கிடைக்குமோ, அதுபோன்று வண்ண வெளிப்பாடு இருக்கும். தெள்ள தெளிவான வண்ண வெளிப்பாடு எனவும் கொள்ளலாம். S UHD டிவிகளில் க்வாண்டம் டாட்ஸ் பயன்படுத்தப்படுகிறது.HDR என்பது அதிமுக்கியமான மற்றும் ஆச்சரியமூட்டும் தொழில்நுட்ப வளர்ச்சியாகும். உயர் இயக்க விகிதம் என்பதே HDR யின் அர்த்தம். இதன் மூலம் வண்ணம் மற்றும் காண்ட்ராஸ்ட் இரண்டையும் விரிவடைய செய்ய முடியும். அதாவது ஒரு காட்சியின் பிரகாச பகுதியை அதிகபட்ச பிரகாசமாய் அதன் ஆழம் வரை சென்று அதிகரிக்க முடியும். வண்ணங்கள் எனும்போது அதிக பிரகாசமான நீலம், பச்சை, சிவப்பு என அனைத்தும் விரிவடைய செய்ய இது உதவுகிறது. நமது கண்ணிற்கு பிரகாசமான வண்ணம் மற்றும் வெளிச்சமான காட்சியை தருவதில் HDR உதவி புரிகிறது.தற்போதைய எல்.சி.டி. தொலைகாட்சிகளில் உயர்தர 4K தொழில்நுட்பம், வளைந்த காட்சி திரை, க்வாண்டம் டாட்ஸ், ஹெச்டிஆர் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரு சில நிறுவனத்தின் தொலைகாட்சிகளில் ஒன்றுடன் ஒன்று இணைந்தவாறும், தனிப்பட்டவாறும் உள்ளனவாக வருகின்றன. பெரும்பாலும் 50 இன்ச் காட்சி திரை கொண்ட பெரிய டிவிகள் இத்தொழில்நுட்பத்தை தன்னகத்தே கொண்டு உள்ளன. இதில் நமக்கு ஏற்ற தொழில்நுட்ப தொலைகாட்சிகளை தேர்வு செய்து வாங்குவதே சிறப்பாக அமையும்.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?

2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.. 10-ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?
மாநில கல்வி வாரியத்தை போல மத்திய அரசு வாரியத்தின் கீழ் உள்ள சி.பி.எஸ்.. பள்ளிகளிலும் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இந்த பொதுத்தேர்வு முறை கடந்த 2010-ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது.பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், அரசின் ஆல்-பாஸ் திட்டத்தாலும் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் இருந்து புகார் வந்தது. எனவே இந்த பொதுத்தேர்வு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.இதைத்தொடர்ந்து சி.பி.எஸ்.. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு முறையை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டு முதல் இந்த பொதுத்தேர்வு முறை மீண்டும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.இது தொடர்பாக 25-ந் தேதி மத்திய கல்வி ஆலோசனை வாரியம் கூடி விவாதிக்கிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதன் மூலம், மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சந்திப்பதில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விபத்தில் காயம் அடைந்து கிடக்கும் நபர்களுக்கு உதவி செய்வோரின் விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது-புதிய அரசாணை வெளியீடு

விபத்தில் காயம் அடைந்து கிடக்கும் நபர்களுக்கு உதவி செய்வோரின் விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது-புதிய அரசாணை வெளியீடு
விபத்தில் சிக்குவோருக்கு உதவி செய்யும் நபர்களின் விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகளை போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு விதித்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-கடந்த 29.10.14 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிசெய்பவர்களுக்கான பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதற்கேற்றபடி, 13.7.16 அன்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி உதவிசெய்பவர்கள் மற்றும் நேரடியாக பார்த்த சாட்சிகள் யாரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லலாம். அவர்களிடம் எந்தக்கேள்வியும் கேட்காமல் முகவரியை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல அனுமதிக்கவேண்டும்.விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவோருக்கு அரசு தக்க சன்மானம் வழங்கவேண்டும். இது விபத்தில் சிக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆர்வமூட்டும். உதவி செய்பவர்கள் யாரும் எந்தவொரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள்.சாலை விபத்தினால் காயமடைந்து கிடக்கும் நபர் பற்றிய விவரங்களை போன் மூலம் போலீஸ் நிலையம், விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றுக்கு சொல்லும்போது, அவரது சொந்த விவரங்களை நேரிலோ அல்லது போன் மூலமாகவோ கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. அதைத் தருவது அவரது விருப்பம்.மருத்துவ படிவங்களையும் பூர்த்தி செய்ய அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. உதவி செய்தவரின் பெயர் மற்றும் சொந்த விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தும் அலுவலர் மீது ஒழுங்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.உதவு செய்தவர்கள் யாராவது சாட்சி சொல்ல தாமாக விருப்பத்தை தெரிவித்தால் அவரிடம் காவல்துறை ஒருமுறை மட்டும் விசாரணை மேற்கொள்ளலாம். உதவிசெய்பவர்களை துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது.விபத்தில் உதவுபவர்கள் யாரும் காயமடைந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினராக இல்லாதபட்சத்தில், அவர்களிடம் இருந்து செலவீனம் எதையும் செலுத்தவேண்டும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் கோரக் கூடாது. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தரவேண்டும்.சாலை விபத்தினால் அவசர சிகிச்சை அளிக்கவேண்டிய சூழ்நிலையில் ஒரு மருத்துவர் கவனமின்றி அக்கறை செலுத்தவில்லை என்றால், அவர் மீது இந்திய மருத்துவக் கழக ஒழுங்கு பணி நடத்தையின்மை எனக்கருதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.விபத்தில் உதவிசெய்வோர் கைது செய்யப்படமாட்டார்கள், வைப்புத் தொகை செலுத்த கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் என்று, அனைத்து ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில நடைமுறை மொழியில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்.உதவி செய்தவர்கள் விரும்பினால், காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்த நேரம், விபத்து நிகழ்ந்த இடம், நாள் போன்றவை தொடர்பான ஒப்புகையை ஆஸ்பத்திரி நிர்வாகம் வழங்கலாம். இதற்கான ஒப்புகை படிவத்தை மாநில அரசு தயார் செய்து அனைத்து ஆஸ்பத்திரிக்கும் தெரியப்படுத்த வேண்டும்.அனைத்து பொது மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் இந்த நடைமுறையை உடனடியாக அமலுக்கு கொண்டுவரவேண்டும். மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.